17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமத்துவபுரத்தில் சமத்துவம் இருக்கு,தண்ணீர் இல்லை.

சமத்துவபுரத்தில் சமத்துவம் இருக்கு,தண்ணீர் இல்லை.

எழுதியவர்: mohan May 9, 2022, 11:11 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி பஞ்சாயத்சை; சார்ந்தது சமத்துவபுரம்.இப்பகுதியிலுள்ள நரிக்குறவ காலணியில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஊராட்சி சார்பில் ஒரேயொரு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.அக்குழாயிலும் கடந்த ஒரு மாதமாக குடிநீh வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.இது குறித்து இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவ மக்கள் சமத்துவபுரத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவமறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!