18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர்ந்து ஒரே பகுதியில் இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் செல்போன் செயின் பறிப்பு.

தொடர்ந்து ஒரே பகுதியில் இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் செல்போன் செயின் பறிப்பு.

எழுதியவர்: mohan May 9, 2022, 10:34 am

மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்ற வாலிபரிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் நகை செல்போன் பறித்த 3 ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை அருள் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் 30. இவர் பைபாஸ் ரோடு கருப்பசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.அப் போது ஒரே பைக்கில் வந்த 3 ஆசாமிகள் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த செயின் ஒன்று செல்போன், பணம் ரூபாய்5 ஆயிரத்தை வழிப்பறி செய்து தப்பி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜசேகர் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பைக் ஆசாமிகளை மூவரையும் தேடி வருகின்றனர்.இதே பகுதியில் இதேபோன்று மற்றொரு சம்பவத்தில்பைபாஸ் ரோட்டில்சிறுவனிடம் கத்திமுனையில் செல்பறிப்புமதுரை பொன்மேனி 2வது தெரு சேர்ந்தவர் செண்பகமூர்த்தி மகன் கோபிநாத் 16.இவர் பைபாஸ் ரோட்டில் சென்ற போது இரண்டு அடையாளம் தெரியாத வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி ரூபாய் 5ஆயிரம் மதிப்புள்ள செல்போனை சிறுவனிடம் இருந்து பறித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கோபிநாத் எஸ் எஸ் காலனி போலீசார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறித்த ஆசாமிகளை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர் வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!