ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டினம் சாலையில் கார் பைக் நேருக்கு நேர் மோதி விபத்தில் ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் உள்பட 4 பேர் பலியாகினர்.
இக்கோர விபத்தில் மண்டபம் யாதவர் தெரு வாசுகி நாதன் மகன் ஜெகன் ( சென்ட்ரிங் தொழிலாளி), இவரது அக்கா மகன் ஜெகதீஸ்வரன், மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். கார் மோதி காயமடைந்த ஓய்வு பெற்ற காவல் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தார்.
கார்-பைக் நேருக்கு நேர் மோதல். ஓய்வு எஸ்ஐ உட்பட 4 பேர் பலி
எழுதியவர்: mohan May 8, 2022, 11:38 am




You must be logged in to post a comment.