18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி..

ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி..

எழுதியவர்: mohan May 8, 2022, 9:55 am

கடையம் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கடையம் வாசுகி மலை அருகே அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் மினி கலாச்சார விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ஐசக் பாக்கியசாமி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மாரிச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசி தலைமை விருந்தினர்களை கவுரவித்தார். கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத், துணைத்தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களின் திறமையை தூண்டும் வகையில் உரை நிகழ்த்தினர். அதில் மாணவர்கள் நாளைய இந்தியாவின் தூண்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.பின்னர் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர். பின்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் கண்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் ஆங்கில துறை ஆசிரியை J.P. லோஷனா நன்றி கூறினார். இதனை தொடர்ந்து விழா நாட்டுப் பண்ணுடன் முடிவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!