17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அருகே திருநகர் சொர்ணம் காலனியில் 10 ஆண்டுகள் வசித்து வரும் பொது மக்கள திருநகர் காவல் நிலையம் முற்றுகை.

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் சொர்ணம் காலனியில் 10 ஆண்டுகள் வசித்து வரும் பொது மக்கள திருநகர் காவல் நிலையம் முற்றுகை.

எழுதியவர்: mohan May 7, 2022, 9:57 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் சொர்ணம் காலனி பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வருகின்றனர் கரண்ட் பில் மற்றும் வீட்டு வரி ஆகியவை செலுத்தி வரும் நிலையில் கடந்த ஓராண்டாக பொதுப்பணித்துறையினர் நீர்ப்பிடிப்புப் பகுதி ஆக்கிரமிப்பு எனக்கூறி காலி செய்ய வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பொதுப்பணித்துறை சார்பில் குடியிருப்பு வாசிகளுக்கு காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது இதனை கண்டித்து பொதுமக்கள் திருநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.மேலும் தங்கள் வீட்டு வரி .கரண்ட் பில் குழாய் வரி செலுத்துவதாகவும், மேலும் தங்களுக்கு ஆக்கிரமிப்பு அகற்ற நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றிருப்பதால் ஆக்கிரமிப்பை கைவிடக்கோரி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.பொது மக்கள காவல நிலையத்தில் முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பாக காணப்பட்டது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!