18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைத் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டியப பள்ளிக் குழந்தைகள்.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டியப பள்ளிக் குழந்தைகள்.

எழுதியவர்: mohan May 6, 2022, 9:51 am

இலங்கையின் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழ்நிலையில் அங்குள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து மத்திய மாநில அரசுகளின் சார்பில் இலங்கைக்கு பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவி வழங்குமாறு தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதனையடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 1 முதல் 5ம் வகுப்பு முதல் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து பள்ளி வளாகத்தின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தங்களின் சிறுசேமிப்பான ரூ5முதல் ரூ20 வரை பெட்டியில் ஆர்வத்துடன் செலுத்தினர்.இதே போல் பள்ளி ஆசிரியர்களும் நிவாரணநிதி அளித்தனர்.இவை தமிழக முதல்வரின் நிவாரணநிதிக்கு அனுப்பப்பட்டன.கஜா புயல் கேரளாவில் வெள்ளம்; போன்ற பல்வேறு காலகட்டங்களில் இப்பள்ளி மாணவ மாணவியர் நிவாரணநிதி வழங்கியுள்ளதை நினைவு கூர்ந்த இப்பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு தற்போது தமிழகத்தில் முதன்முறையாக இலங்கைத்தமிழர்களுக்கு நிவாரணநிதி வழங்கியதையும் சுட்டிக் காட்டியவர் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பிறருக்கு ஒன்று கூடி உதவி செய்யும் மனப்பான்மையையும் பிறருக்கு உதவும் குணத்தையும் இது போன்ற நிகழ்வுகள் வளர்ப்பதாகக் குறிப்பிட்டார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!