வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை புத்தர் நகரை சேர்ந்தவர் வசந்தகுமார்(25)இவர் கானா பாடல்களை எழுதி ஆல்பம் தயாரித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் குடியாத்தம் அருகில் உள்ள மேல் ஆலத்தூர் ரயில்நிலையத்திற்கு வந்துள்ளார். அதன்பிறகு ஓடும் ரயில் முன்பு நின்று செல்பி எடுக்க முயற்சி செய்து உள்ளார், அப்போது வேகமாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றிவேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வசந்தகுமாருக்கு நேற்று முன்தினம்தான் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.கானா பாடகர் பிறந்தநாளில் இறந்தது குடும்பம் மற்றும் நண்பர்களிடையே மிகுந்த அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் அருகே செல்பி எடுத்த கானா பாடகர் ரயில் மோதி உயரிழப்பு. பிறந்தநாளில் சோகம்.
எழுதியவர்: mohan May 5, 2022, 10:13 am




You must be logged in to post a comment.