17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருப்பரங்குன்றம் மலை மேல் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை மேல் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan May 4, 2022, 9:41 am

ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்றும் ஜக்காத் கொடுத்தும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.நோன்பில் இறுதியில் பிறை பார்க்கப்பட்டு ரம்ஜான் கொண்டாடப்படும் இதனைத்தொடர்ந்து ரம்ஜான் நாளில் ஈகை பெருநாள் என்றழைக்கப்படும் ரம்ஜானில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவார்கள்.இதனடிப்படையில் திருப்பரங்குன்றம் தர்கா பள்ளி சார்பாக ரம்ஜான் பெருநாள் தொழுகையை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் ஈத் பெருநாள் தொழுகையில் நடைபெற்றதுஇதில் ஏராளமான இஸ்லாமியர்கள், குழந்தைகள் புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்து கொண்டனர்.பெருநாள் தொழுகையில் தற்போது மீண்டும் புதிதாக பரவிவரும் கொரோனா தொற்றிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாக்கப்படவேண்டும் என சிறப்பு துவா செய்தனர்.பின்னர் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்ந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!