17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே ஓய்வுபெற்ற ஊழியர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

காட்பாடி அருகே ஓய்வுபெற்ற ஊழியர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

எழுதியவர்: mohan May 3, 2022, 1:40 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கண்டிப்பேடு பகுதியை சேர்ந்தவர் சாலமன் (65) இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டிப்பேடு பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். இந்த நிலையில் நேற்று மாலை ஒட்டந்தாங்கல் பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்று உள்ளார். இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. விஏஓ வின் புகாரின் பேரில் திருவலம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது துணிமணிகள் விவசாய கிணற்று அருகில் இருந்தது.தகவல் பெற்ற காட்பாடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் பால்பாண்டி, முருகேசன் தலைமையில் வீரர்கள் சதீஷ், வீரன், ராஜேஷ் ஆகியோர் ஒரு மணிநேரமாக போராடிபெரிய கிணற்றில் உயிரிழந்த சாலமன் உடலை மீட்டனர். இதுகுறித்து திருவலம் காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!