18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவியின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதியளித்த நகர்மன்றத் தலைவர் பொதுமக்கள் பாராட்டு.

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதியளித்த நகர்மன்றத் தலைவர் பொதுமக்கள் பாராட்டு.

எழுதியவர்: mohan May 3, 2022, 10:46 am

உசிலம்பட்டி நாடார் தொடக்கப்பள்ளியில் 75 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை தாங்க உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் திருமதி சகுந்தலா அவர்கள் பள்ளிக்கு வருகை தந்திருந்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு பாராட்டினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் படத்தை வரைந்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழா நடைபெறும் வேளையில் பள்ளி மாணவி ஒருவர் எமது பள்ளிக்கு விழா மேடை அமைத்து தருமாறு நகர மன்ற தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். அம்மாணவியின் வேண்டுகோளை ஏற்று நகரமன்ற தலைவர் அவர்கள் உடனடியாக உங்கள் பள்ளிக்கு நாடக மேடை ஒன்று அமைத்து தருகிறேன் என உறுதியளித்தார். மாணவியின் வேண்டுகோளை நிறைவேற்ற உறுதியளித்த நகர்மன்ற தலைவரின் செயல் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே பெரிதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!