18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு கரம் கொடுக்கும் தேவ அக்கினிசபையினர்.

தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு கரம் கொடுக்கும் தேவ அக்கினிசபையினர்.

எழுதியவர்: mohan May 1, 2022, 4:11 pm

வாழ்நாள் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்களை கவுரப்படுத்தும் விதமாக மே 1ம் தேதி தொழிலாளர்கள் தினமாக தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.உண்மையில் தொழிலாளர்கள் தினத்தை விடுமுறை தினமாக பலரும் நினைக்கின்றனரே தவிர தொழிலாளர்களின் கஷ்டத்தை கண்டு கொள்வதில்லை.இதனை அறிந்ததால் என்னவோ ஒவ்வொரு வருடமும் மே தினத்தன்று தொழிலாளர்கள் ஏழைகளை அழைத்து கறி விருந்து படைத்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர் தேவ அக்கினி சபையினர்.

இந்த அமைப்பின் தலைவராக உள்ள கருணாகரன் இரும்பை உடைத்து உருக்கும் தொழில் செய்து வருவதால் தொழிலாளர்களின் கஷ்டத்தை நன்கு உணர்ந்துள்ளார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனியார் மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டன.சகோதரர் கருணாகரன் தலைமையேற்று தொழிலாளர்களுக்கு உதவிகள் வழற்கினார்.இந்நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!