18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை தனக்கன்குளம் பகுதியில் குடும்ப பிரச்சனையில் மதுபோதையில் பொதுமக்களிடம் அத்துமீறிய இளைஞர் மீது திருநகர் போலீஸார் வழக்கு பதிவு.

மதுரை தனக்கன்குளம் பகுதியில் குடும்ப பிரச்சனையில் மதுபோதையில் பொதுமக்களிடம் அத்துமீறிய இளைஞர் மீது திருநகர் போலீஸார் வழக்கு பதிவு.

எழுதியவர்: mohan May 1, 2022, 11:27 am

மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியில் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுதல், தகாத வார்த்தையில் திட்டுதல் மற்றும் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் இளைஞரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் திருநகர் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அளித்து அவர் மீது வழக்குப்பதிவு மாறு கோரிக்கை விடுத்தனர்.மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன், (வயது 34) இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது அக்கா ராஜேஸ்வரி குடும்பத்துடன் சொத்து பிரச்சனையை காரணம் காட்டி ரகளையில் ஈடுபட்டு வந்த நிலையில்.சமீபகாலமாக அப்பகுதி பொதுமக்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தையில் திட்டுதல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபடுவதை தற்போது வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் திருநகர் காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து மதுபோதையில் ரகளையில் ஈடுபடும் இளைஞரை அழைத்த திருநகர் போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் ஜெகநாதன் தன் மீது குற்றம் சாட்டிய பொதுமக்களிடம் கடந்த இரு தினங்களாக மது அருந்திவிட்டு அவதூறாக பேசுவது, இரவு நேரங்களில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறி நடக்க முயற்சி செய்தல், நிர்வாணமாக சாலையில் நடந்து செல்லுதல் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியின் பெயரைச் சொல்லி கொச்சையான சொற்களால் ஆண்கள் மற்றும் பெண்களை இழிவாக பேசுதல் உள்ளிட்ட செயல்களில் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டுள்ளார்.இந்தநிலையில் அப்பகுதி மக்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை விலங்குகளை துன்புறுத்துதல் மற்றும் இதனை தட்டிக்கேட்ட நபர்கள் தாக்கி அவர்கள் மீது கொலை மிரட்டல் விடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிப்புக்கு உள்ளான அப்பகுதி பொதுமக்கள் அவர்களது நடவடிக்கைகளை வீடியோ எடுத்துள்ளனர். இதனை ஆதாரமாக வைத்து இன்று திருநகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றாக இணைந்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய புகார் மனு ஒன்றை அளித்தனர். இதனை தொடர்ந்து அவரது புகாரை ஏற்ற திருநகர் போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!