17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாதஸ்வர இசையுடன் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா

நாதஸ்வர இசையுடன் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா

எழுதியவர்: mohan April 30, 2022, 2:25 pm

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் 75 வது ஆண்டு விழா நடைபெற்றது.பள்ளித் தலைமை ஆசிரியர் மதன் பிரபு வரவேற்று பேசினார்.உசிலம்பட்டி நகர் மன்ற தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார்.நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் முன்னிலை வகித்தார்.உசிலம்பட்டி நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி மற்றும் 18 வது வார்டு உறுப்பினர் பிரகதீஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மதுமதி ஆசிரியை நன்றியுரை கூறினார்.

பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் தமிழக முதல்வர் படங்களை வரைந்த மாணவர்களுக்கு நகர் மன்ற தலைவர் பரிசுகளை வழங்கினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நாதஸ்வர வித்துவான் சண்முகம் கலந்து கொண்டு மாணவர்கள் முன் பாடல்களை வாசித்து காட்டினார்.மாணவர்கள் நன்கு ரசித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!