ராமநாதபுரம், ஏப்.30- தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன் இறுதி போட்டியில் சென்னையை சேர்ந்த தடகள வீரர் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை பாக்ஜலசந்தி கடற்கரையில் சர்ஃபிங் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய ஸ்டாண்ட்-அப் பேட்லிங் சாம்பியன் இறுதி போட்டி நடந்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறை நடந்ததேசிய அளவிலான இந்த நீர் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கோவா, ஒரிசா, கொல்கத்தா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களை சேர்ந்த 57 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். ஸ்பிரின்ட், தொழில்நுட்ப பந்தயம், தூரம் என மூன்று பிரிவுகளின் கீழ் நீர் விளையாட்டு
தொழில்நுட்ப பந்தய இறுதி போட்டியில் சென்னை தடகள வீரர் சேகர், புனே வீராங்கனை காயத்ரி ஆகியோர் தேசிய சாம்பியன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 12 கிமீ தூர இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை சேகர், பெண்கள் பிரிவில் சென்னை வீராங்கனை மோனிகா, 200 மீட்டர் தூர ஸ்பிரின்ட் போட்டி ஆண்கள் பிரிவில் சென்னை சேகர், பெண்கள் பிரிவில் புனே வீராங்கனை காயத்ரி தேசிய அளவில் சாம்பியன்களான தேர்வு பெற்றனர்.தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் போட்டி ஆண்கள் பிரிவில் சென்னை சேகர் தொடர்ந்து எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தள நிலைய கமாண்டர் கேப்டன் விக்ராந்த் சபனீஸ் பதக்கம், சான்றிதழ் வழங்கினார்.
தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் போட்டி; எட்டாவது முறையாக சாம்பியன் வென்ற சென்னை தடகள வீரர்.
எழுதியவர்: mohan April 30, 2022, 10:23 am




You must be logged in to post a comment.