திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த உச்சிமலைக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரத சாரண , சாரணியர் இயக்கத்தை மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கு அரவிந்தன் அவர்கள் வழிகாட்டுதலின் படியும் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாவட்ட செயலர் ம.வெங்கடேஷ் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் பள்ளியில் பாரத சாரணர் இயக்கம் தொடங்கப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் பழனியம்மாள் அனைவரையும் வரவேற்று பேசினார்.வட்டாரக் கல்வி அலுவலர் ஷகிலா பாரத சாரண சாரணியர் இயக்கத்தை தொடங்கி வைத்து
புதியதாக இணைந்த 24 சாரண சாரணிய மாணவர்களுக்கு கழுத்துப் பட்டையையும் சீருடையையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.சாரண இயக்கம், பற்றியும், அதன் வரலாறு , உறுதிமொழி,சாரண சட்டம்,மற்றும் நற்பண்புகள்,சாரண செயல்பாடுகள் பற்றியும் மாவட்ட அமைப்பு ஆணையர் வி. ஆர் .அன்பழகன மாவட்ட பயிற்சி ஆணையர் கோமதி, அ.பாலகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.தர்பார்பாளையம் தலைமையாசிரியர் தங்கவேல், விண்ணவணூர் பள்ளி சாரண ஆசிரியர் ராமமூர்த்தி, மேல்பெண்ணாத்தூர் சாரண ஆசிரியர் சரவணகுமார் வாழ்த்துரை வழங்கி விழாவை சிறப்பித்தனர்.சாரண சாரணிய பொறுப்பாசிரியர்கள் நந்தகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஏழுமலை , சக ஆசிரியர்கள் காசி, அனிற்றா ரூபவதி ரேச்சல், சுரேஷ், சரவணன், ஷாலினி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்
உச்சிமலைகுப்பம் கிராமத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கம் தொடக்கம்
எழுதியவர்: mohan April 29, 2022, 2:03 pm




You must be logged in to post a comment.