18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சொத்துவரி உயர்வை ரத்து செய்ய கோரி, மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம் பா.ஜ.க மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் மனு.

சொத்துவரி உயர்வை ரத்து செய்ய கோரி, மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம் பா.ஜ.க மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் மனு.

எழுதியவர்: mohan April 29, 2022, 9:46 am

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரியை ரத்து செய்ய கோரி, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர்.பா. சரவணன், மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் இன்று (28.04.2022) கோரிக்கை மனுவினை வழங்கினார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள ,இந்த வரி உயர்வு சாமானிய மக்களை வாடி வதைக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.எனவே, இதனை திரும்ப பெற வலியுறுத்தி ,மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்று, பா.ஜ.க மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.மாநகர் மாவட்ட பா.ஜ.க துணைத்தலைவர் ஜெயவேல், மனோகரன், கீரைத்துறை குமார்,ராஜ்குமார் , மாமன்ற உறுப்பினர் பூமா ஜனாஸ்ரீ முருகன், மாவட்ட செயலாளர்கள் பழனிவேல், செண்பக பாண்டியன், சக்திவேல், வினோத்குமார், மற்றும் டாக்டர்.கோகுல்அஜித், செந்தில்குமார், நரிமேடு மணிகண்டன், இளங்கோமணி, சாம்சரவணன், சங்கர்லால், டாக்டர்.முரளிபாஸ்கர், ஓம்சக்தி.தனலட்சுமி, சைனா சரவணன், செந்தூர் பாண்டியன், பாரதி, சோலை.மணிகண்டன்,உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!