17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விக்கிரமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை 5 பேர் கைது இருசக்கர வாகனம் 2 பறிமுதல்.

விக்கிரமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை 5 பேர் கைது இருசக்கர வாகனம் 2 பறிமுதல்.

எழுதியவர்: mohan April 29, 2022, 9:40 am

சோழவந்தான் அருகில் விக்கிரமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்துவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுஅதன் அடிப்படையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது மாவட்ட தனிப்படை காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபர்களை பிடித்து விசாரிக்கையில்அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சதிஷ், விக்கிரமங்கலத்தை சேர்ந்த தமிழ்பாண்டி, ராமு, கொடி,வீராசாமி உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர்விசாரிக்கையில் அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது இவர்கள் விக்கிரமங்கலம் பகுதியில் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்ததுஇதனையடுத்து அவர்களைகைது செய்து அவர்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.சமீப காலங்களில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதற்கு மாணவர்களிடையே புழங்கும் போதை பழக்கமும் ஒரு காரணமாகும்இதனை மதுரை மாவட்ட காவல் துறையும் தமிழக அரசும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!