17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டிராக்டர் ஓட்டுநர் வீட்டில் திடீர் தீ விபத்து.

டிராக்டர் ஓட்டுநர் வீட்டில் திடீர் தீ விபத்து.

எழுதியவர்: mohan April 28, 2022, 9:26 am

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கப்பலூர் அருகே தனிக்கொடி இவரது வீட்டில் டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்யும் ராதாகிருஷ்ணன் வயது 38 என்பவர் குடியிருந்து வருகிறார் இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அவர் வீட்டில் இருந்து புகை வருவதாக தெரிய வந்தது உடனடியாக அருகில் இருந்தவர்கள் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அதற்குள் தீ மளமளவென எரிய தொடங்கியது சம்பவ இடத்திற்கு விரைந்த திருமங்கலம் நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை உடனடியாக அணைத்தனர் எனினும் மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது இச்சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் என தெரிய வருகிறது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!