17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்மாற்றியில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மின்மாற்றியில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

எழுதியவர்: mohan April 27, 2022, 9:51 am

மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு அருட்பெருஞ்ஜோதி நகர் பகுதியில் குடியிருப்பு அதிகமுள்ள பகுதியான இப்பகுதியில் மின்மாற்றி ஒன்று உள்ளது இதில் நேற்று நள்ளிரவு 12 .15மணி அளவில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது அப்பொழுது அதே பகுதியை சேர்ந்தபிச்சைமணி ஆப் நைட் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த மின்மாற்றி தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக உடனடியாக தகவல் தெரிவித்தார் சம்பவ இடத்துக்கு விரைந்த.. பழங்காநத்தம் மின்வாரிய லயன் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான ஊழியர்கள் சந்தனகுமார் சுந்தர்ராஜ் மற்றும் பெருமாள் சாமி ஊழியர்கள் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது பழுதை சரி செய்து உடனடியாக மின் இணைப்பைத் கொடுத்தனர்..மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்.. உரிய நேரத்தில் தகவல் கிடைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மின்மாற்றியில் ஆயில் இருப்பதால் எளிதில் தீ பிடிக்க கூடிய வாய்ப்புகள் இருந்திருக்கும் இன்னும் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது உடனடியாக என தெரிவித்தார் உரிய நேரத்தில் ஊழியருக்கு தகவல் கொடுத்து உதவிய இளைஞருக்கு நன்றியும் விரைவாக செயல்பட்டு ஊழியர்களுக்கு பாராட்டையும் நன்றியும் அப்பகுதி மக்கள் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!