18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூட்டுவலி மருத்துவ முகாம் நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

மூட்டுவலி மருத்துவ முகாம் நடத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

எழுதியவர்: mohan April 26, 2022, 9:11 am

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாநகராட்சி சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் எலும்பு மூட்டு வலிகளுக்கான பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையேற்று பிசியோதெரபி மருத்துவர் தினேஷ்குமார் மற்றும் குழுவினரை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில்…பிசியோதெரபி மருத்துவம் என்பது உடற்பயிற்சி மூலம் எழும்பு மூட்டு பாகங்களை வலுப்படுத்தும் சிகிச்சை முறையாகும் என்றார்.மேலும் முதியோர்களுக்கு புரியும் வகையில் பல தகவல்களை பேசினார்.பின்னர் மருத்துவர் தினேஷ்குமார் தனது மருத்துவ முறை குறித்து விளக்கி சிகிச்சையை தொடங்கினார்.அவரவர் உடலுக்கு ஏற்ற வகையில் உடற்பயிற்சி செய்யும் முறை குறித்து தனித்தனியாக முதியோர்களுக்கு விளக்கம் தரப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் கலாம் வழி நண்பர்கள் நிறுவனர் செந்தில்குமார், மாற்றம் தேடி பாலமுருகன், மக்கள் தொண்டன் அசோக்குமார் மற்றும் எம்மால் இயன்றது கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முதியோர் இல்லம் மேலாளர் கிரேசியஸ் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்த வழிகாட்டி மணிகண்டன், மருத்துவர்கள் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!