17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்டு இறைச்சி கடையில் சுகாதாரத்துறை யினர் திடீர்ஆய்வு.

ஆட்டு இறைச்சி கடையில் சுகாதாரத்துறை யினர் திடீர்ஆய்வு.

எழுதியவர்: mohan April 25, 2022, 12:06 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி, வில்லாபுரம், கீரைத்துறை உள்ளிட்ட பகுதிகளில்நகர் மதுரை மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜா ,உதவி நகர்நல அலுவலர் தினேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் ஆட்டு இறைச்சி கடைகளில் சரியான முறையில் ஆட்டு இறைச்சி வதைக்கும் இடத்தில் ஆட்டு இறைச்சி அறுத்த பின்பு மாநகராட்சிஊழியர்களால் முறையான முறையில் சீல் வைக்கப்பட்ட பின்பு ஆட்டு இறைச்சி கடைகளில் விற்க வேண்டுமென்று மாநகராட்சியால் அறிவுறுத்தப்பட்டது.அதனடிப்படையில் இன்று சிந்தாமணி வில்லாபுரம் கீரைத்துறை உள்ளிட்ட 30 கடைகளுக்கு மேல் சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சுகாதார பணியாளர்கள்உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் 10க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி கடைகளில் சுகாதாரமான முறையில் விற்கப்பட்ட ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்யப்பட்டு ஒரு கடைக்கு ௹பாய் 1000 வீதம் 10000 ரூபாய் சுகாதார துறையினரால் வசூலிக்கப்பட்டது.ஆட்டு இறைச்சி கடை ஊழியர்கள்கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் கடைக்கு ஆட்டிறைச்சி வாங்க வரும் பொதுமக்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றுசுகாதாரத்துறையினர்அறிவுறுத்தினர்.இந்த நிகழ்ச்சியில்உதவி நகர்நல அலுவலர் தினேஷ் சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன்சுகாதார ஆய்வாளர்பா. ராமநாதன்உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!