17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » சென்னையில் SYNERGY INTERNATIONAL குழுமத்தின் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா மற்றும் வியாபார முதலீடு சம்பந்தமான கலந்துரையாடல்..

சென்னையில் SYNERGY INTERNATIONAL குழுமத்தின் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா மற்றும் வியாபார முதலீடு சம்பந்தமான கலந்துரையாடல்..

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2018, 3:20 pm

சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் SYNERGY INTERNATIONAL GROUP OF COMPANY, கல்வித் துறைச் சார்ந்த பணிகள் மற்றும் ஹஜ், உம்ரா போன்ற சேவைகளும் செய்து வருகின்றனர். சமீபத்தில் கீழக்கரையிலும் இந்நிறுவனத்திற்கான கிளை ஆரம்பம் செய்யப்பட்டது.

இந்நிறுவனம் சார்பாக தமிழகம் தழுவிய மாபெரும் கட்டுரைப்போட்டி சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, அப்போட்டியில் நூற்று கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா வரும் ஜனவரி 30ம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள சென்னை கேட் ஹோட்டலில் மாலை 04.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து வியாபாரத்தில் வாய்ப்புள்ள துறைகள் பற்றி “BUSINESS OPPORTUNITY MEEY” எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தொழில் துறையில் அனுபவம் வாய்ந்த நபர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற SYNERGY INTERNATIONAL GROUP நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!