18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கல்..

நெல்லையில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கல்..

எழுதியவர்: mohan April 25, 2022, 11:47 am

நெல்லையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரும்பொருள் பாதுகாப்பு குறித்த தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அரும்பொருள் பாதுகாப்பு பற்றிய 5 நாட்கள் புத்தொளி பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் முதல்நாள் பாளையங்கோட்டை வரலாறு பற்றியும், பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருட்கள் பற்றியும், மாணவ-மாணவிகளுக்கு காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி விரிவாக எடுத்துரைத்தார். இரண்டாம் நாள் கற்சிலைகள் பாதுகாப்பு பற்றிய செய்முறை பயிற்சி நடத்தப்பட்டது. மூன்றாம்நாள் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு பற்றி முனைவர் கட்டளை கைலாசம் சிறப்புரை ஆற்றினார். நான்காம் நாள் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, மர சிற்பங்கள் பாதுகாப்பு, மற்றும் உலோகப் பொருள்கள் பாதுகாப்பு தொடர்பான செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தார். பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பே. ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பொருநை மைந்தன் காஜா மொய்தீன் வாழ்த்துரை வழங்கினார். இப்பயிற்சியில் நெல்லை ,தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து எண்பதற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!