17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பொதுநல சங்க மாவட்ட மாநாடு.

வேலூரில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பொதுநல சங்க மாவட்ட மாநாடு.

எழுதியவர்: mohan April 24, 2022, 12:32 pm

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட மாநாடு வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.வேலூர் மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சுரேஷ்வர வேற்றார்.இதில் நிறுவனத் தலைவர் சகிலன், வேலூர் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாநில தலைவர் தணிகவேல், பொதுச்செயலாளர் வீரமுத்து, பொருளாளர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் பேசினர். காட்பாடி தாலுகா தலைவர் புகழ்வேந்தன்.மாவட்ட துணைத்தலைவர் கே.வி.குப்பம் லோகநாதன், உள்ளிட்ட பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர். உயிரிழந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!