வேலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று 22-ம் தேதி மாலை 4.45 மணிக்குதுவங்கி 15 நிமிடத்தில் முடிந்தது. சொத்துவரி உயர்வைகண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் பிஜேபி கவுன்சிலர் ஒருவர் என கூட்டம் துவங்கியதும் சொத்துவரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்து மாநகராட்சி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிஜேபி உறுப்பினர் தவிர்த்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.முன்னதாக முதல் கூட்டத்திற்கு மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். 57 கவுன்சிலர்கள் மட்டும் கலந்துகொண்டனர். 111 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி மேயர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டம் துவங்கிய 15 நிமிடத்தில் எழுந்து சென்றார்.இதில் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தி, எம்.எல்.ஏ.காரத்திகேயன், துணை மேயர் சுனில்குமார், ஆணையர் அசோக் குமார், பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
வேலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் 15 நிமிடத்தில் முடிந்தது. அதிமுக,பிஜேபி வெளிநடப்பு. ஆர்ப்பாட்டம்.
எழுதியவர்: mohan April 23, 2022, 12:04 pm




You must be logged in to post a comment.