17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறப்பாக அதிகமான இரத்த கொடையாளிகள் கலந்து கொண்ட தவ்ஹீத் ஜமாத் இரத்த தான முகாம்..

சிறப்பாக அதிகமான இரத்த கொடையாளிகள் கலந்து கொண்ட தவ்ஹீத் ஜமாத் இரத்த தான முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2018, 2:13 pm

கீழக்கரையில் இன்று (27.1.2018) சனிக்கிழமை காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் இன்று கீழக்கரை அரசு மருத்துவமனையில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமை கீழக்கரை காவல் ஆய்வாளர் R.திலகவதி துவக்கிவைத்தார். தவ்ஹீத் ஜமாத் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். காலை 10.00 மணிமுதல் பகல் 1.00மணிவரை நடைபெற்ற இம்முகாமில் 10 பெண்கள் உள்பட 52 நபர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினார்கள். அதிகமான பெண்கள் இரத்ததானம் செய்வதற்கு முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கீழக்கரையில் நடைபெற்ற இரத்ததான முகாம்களில் இதுதான் அதிகமாக நபர்கள் பங்குகொண்ட முகாம் என தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!