தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்கவும், ஈழத்தமிழர் உரிமையை பாதுகாக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே மதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம் நடந்தது.மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ தலைமை வகித்தார். துணைப்பொதுச்செயலர் ஆடுதுறை முருகன், சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், ராமநாதபுரம் மாவட்ட செயலர் பேட்ரிக் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை செயலாளர் கராத்தே பழனிச்சாமி, மாநில மீனவரணி துணை செயலாளர் சின்னத்தம்பி, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் குணா, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, ராமேஸ்வரம் நகர் செயலர் பாஸ்கரன், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலர் லூக்காஸ் உள்பட 100க்கும் மேற்ப்பட்ட மதிமுகவினர் கலந்துகொண்டனர். மீனவ சங்க தலைவர்கள் சேசுராஜா, சகாயம், ஆல்வின் உள்ளிட்ட மீனவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ராமேஸ்வரத்தில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் .
எழுதியவர்: mohan April 23, 2022, 9:40 am




You must be logged in to post a comment.