17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்.

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்.

எழுதியவர்: mohan April 21, 2022, 9:51 am

மதுரையில் பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள, திடீர்நகர் பொதுமக்கள் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சி சார்பில், வார்டுகள் தோறும் குடிநீர் குழாய்கள் மூலம் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள திடீர் நகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை யாம். இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களும் பேசினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!