18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே மின் சாதனப் பொருட்கள் கடையில் தீ விபத்து.

மதுரை அருகே மின் சாதனப் பொருட்கள் கடையில் தீ விபத்து.

எழுதியவர்: mohan April 21, 2022, 9:45 am

 மதுரை அருகே, அழகர்கோவில் சாலை கடச்சனேந்தல் நேற்று மாலை 5.30 நேரத்தில் , மின்சார பொருள் விற்பனை செய்யும்ஒரு கடையில் பகுதியில் ,ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பெறுமான மின்சார பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. கடையில் உள்ள மின்சாதன பொருட்கள் கடையில் ,திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், மற்றும் கரும் புகை சூழ்ந்த தாலும் கடையின் உள்ளே யாரும் செல்ல முடியவில்லை. இதனால், கடையினுள் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பெறுமான மின்சாதன பொருட்கள் தீயில் சேதமடைந்தன. தகவல் கிடைத்ததும், தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து துரிதமாக தீயை அணைத்தனர். இதனால் ,தீ மற்ற கடைகளுக்கும் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து ,புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!