18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெண்ணும் பெண்ணும் காதல்: உடல் உறுப்பை அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி திருமணம் செய்த பின்னர் ஏமாற்றிய பரிதாபம்.

பெண்ணும் பெண்ணும் காதல்: உடல் உறுப்பை அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி திருமணம் செய்த பின்னர் ஏமாற்றிய பரிதாபம்.

எழுதியவர்: mohan April 20, 2022, 9:49 am

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகள் ஜெயசுதா, இவர் மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோவில் வந்த போது ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த ரவி மகள் செந்திலா என்பவருடன் நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. செந்திலா ஊர்க்காவல்படையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி இருவரும் மதுரையின் பல்வேறு இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றிய நிலையில் இருவரின் வீட்டிற்கும் தோழிகளாக பழகுவதாக தெரிந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.அப்போது செந்திலா, ஜெயசுதாவிடம்பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் இந்த சமுதாயம் கேலி பேசும், எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீ ஆணாக மாறிவிட்டால் வீட்டில் யாருக்கும் தெரியாது என கூறியதோடு ஆணாக மாற வேண்டும் என கட்டாயபடுத்தியதாக தெரிகிறது.மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநம்பியாக மாற்றி கொள்ள அறுவை சிகிச்சை பிரிவு துவங்கியுள்ளனர். அங்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வசதி உள்ளது என அழைத்து சென்று டிசம்பர் 2021ல் உடல் உறுப்பை அறுவை சிகிச்சையும் செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியதன் பேரில் ஹார்மோன் ஊசியும் போட்டு வந்துள்ளார் ஜெயசுதா.அறுவை சிகிச்சைக்குப் பின்பு ஜெயசுதா என்கிற பெயரை ஆதிசிவன் என பெயரை மாற்றி இருவரும் தைப்பொங்கல் அன்று திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.செந்திலாவை பெற்றோர்கள் இரண்டு மூன்று நாட்கள் தேடிய நிலையில் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரண்டு மாதங்கள் பின்னர் ஆதிசிவனுடன் திருமணமாகி திருப்பரங்குன்றத்தில் வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வருவதாக செந்திலா தனது அம்மாவிற்கு போன் செய்து கூறியுள்ளார்.இதையடுத்து செந்திலாவை வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளையின் விவரம் குறித்து பேசிய செந்திலாவின் அம்மா, அப்பா தோழியா இருந்த ஜெயசுதாவை தான் ஆணாக மாற்றி திருமணம் செய்தது பற்றி கூறியுள்ளார் செந்திலா.இதனால் பதறி போன பெற்றோர்கள் செந்திலாவின் உடைமைகளையும், பொருட்களையும் எடுத்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்திலா பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளனர்.புகாரின் பேரில் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதில் செந்திலா ஆதிசிவனுடன் ஒன்றாக வாழ பிடிக்கவில்லை என்றும் தனது பெற்றோருடன் செல்வதாக கூற ஜெயசுதா என்ற ஆதிசிவனுடன் செல்ல மறுத்த நிலையில் காவல்நிலையத்தில் இருதரப்பினரிடமும் எழுதி வாங்கி விட்டு அனுப்பி விட்டனர்.இதுதொடர்பாக ஊமச்சிகுளத்தில் இருக்கும் செந்திலா வீட்டிற்கு சென்று இதுகுறித்து விளக்கம் கேட்டபோது அவரின் பெற்றோர்கள் இது சம்பந்தமாக போலீஸ் ஸ்டேஷனில் பேசி முடித்துக் கொண்டோம் எதுவும் கேட்காதீர்கள் என்று கூறிவிட்டார்.ஆனால் அந்த தெருவில் உள்ளவர்கள் அனைவரும் சுதாவின் பரிதாப நிலையை பார்த்து கண்டிப்பாக செந்திலா இந்த ஆணாக மாற தனது உடலை அறுத்து விட்டு நிற்கும் இவளோடு தான் வாழ வேண்டும்.இவளை இந்த நிலைக்கு தள்ளிய அவர்கள் நல்லா இருக்க மாட்டார்கள் என ஒட்டுமொத்தமாக ஆதங்கத்தோடு கூறினர். அதோடு இவளை பார்த்து எங்கள் ஊரில் இருக்கும் பொம்பள பிள்ளைகளும் கெட்டுப் போய்விடும் அதனால் இந்த ஊரில் இவளை இருக்க விட மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

தற்போது உடல் உறுப்பையும் இழந்து பணத்தையும் இழந்து, தாய் – தந்தையும் வீட்டில் சேர்த்து கொள்ளாததால் காதலிக்காக பெண்ணாக மாறிய ஜெயசுதா ரோட்டில் அலையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!