18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதல் போட்டியில் பரிசு குவித்த சிலம்பாட்ட மாணவர்கள் .

முதல் போட்டியில் பரிசு குவித்த சிலம்பாட்ட மாணவர்கள் .

எழுதியவர்: mohan April 18, 2022, 10:25 am

இராமநாதபுரம் ஜூனியர் ரெட் கிராஸ், ஷ்ராமல் அகாடமி சார்பில் நடந்த ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்ற முதல் போட்டியில் மண்டபம் மகாலிங்கம் சிலம்பாட்டக்குழுவினர் பரிசு குவித்தனர். 11 முதல் 13 வயது பிரிவில் பங்கேற்ற மண்டபம் மறவர் தெரு மகாலிங்கம் சிலம்பாட்டக்குழு மாணவர்களான கே.தில்லை ஹரீஷ் (ராஜா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவர் தில்லை ஹரீஷ், ராஜா சிபிஎஸ்இ பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவர் நகுல்,மண்டபம் முகாம் கேந்திரியா வித்யாலயா, 5 ஆம் வகுப்பு மாணவர்ரவி ராகுல்ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர். பரிசு வென்று பெருமை சேர்த்த இம்மாணவர்களை யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வள்ளி விநாயகம், ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் ரமேஷ், ஷ்ராமல் அகாடமி நிறுவனர் தில்லை பிரகாஷ், ஷ்ராமல் அகாடமி சிலம்பம் பயிற்றுநர் விக்னேஷ் குமார், மகாலிங்கம் சிலம்பாட்டக்குழு பயிற்றுநர் லட்சுமணன், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, துணை தலைவர் நம்புராஜன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!