17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நிகழ்வுகள் » கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற தெருமுனை மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற தெருமுனை மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி

எழுதியவர்: keelai January 26, 2018, 11:37 pm

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் நடத்திய தெருமுனை மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி இன்று (26.01.2017) இரவு 8.30 மணியளவில் (சின்னக்கடை தெரு) ஈஸா தண்டையல் தெருவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய கல்வி சங்கத்தின் தலைவர். சட்டப் போராளி. தவ்ஹீத் ஜமாலி ஆலீம் தலைமையேற்று மார்க்க சொற்பொழிவு வழங்கினார். அதனை தொடர்ந்து மதரஸ்துல் ராலியா மாணவர்கள் முஹம்மது ரிதுவான் மற்றும் முஹம்மது பயால் மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியின் நிறைவாக, அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையே கேள்வி பதில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் வழங்கி, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி சல்மான்கான் மற்றும் நிர்வாகி சுகைல் சிறப்பாக செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!