திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள ஜாயஸ் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியோர்களுக்கு கொங்கர்குளம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் சியான் விக்ரம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக விக்ரம் பிறந்த தினத்தை முன்னிட்டு கிளைத் தலைவர் மணி தலைமையில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. ஜாய்ஸ் முதியோர் இல்லை இயக்குனர் மாசிலாமணி வரவேற்று பேசினார். ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் செல்வ பாண்டி, மற்றும் நற்பணி மன்ற இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
நிலக்கோட்டையில் அன்னதானம் வழங்கும் விழா.
எழுதியவர்: mohan April 18, 2022, 9:57 am




You must be logged in to post a comment.