17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் வார விழா; வீரர்களுக்கு அஞ்சலி..

சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் வார விழா; வீரர்களுக்கு அஞ்சலி..

எழுதியவர்: mohan April 15, 2022, 10:15 am

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது உயா்நீத்த தீயணைப்பு வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப். 14 ஆம் தேதி மறைந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் சுரண்டை நிலைய தீயணைப்பு அலுவலர் முத்துச்செல்வன் தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து பாலச்சந்தர், சிறப்பு நிலை அலுவலர்கள் பாலகிருஷ்ணன், ரவீந்திரன் மற்றும் ஏட்டுகள், தீயணைப்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே தீயணைப்பு துறையின் பணிகள், மற்றும் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!