18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குறைந்த விலையில் மொபைல் விளம்பரம் மூலம் பணம் மோசடி; தென்காசி சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மீட்பு..

குறைந்த விலையில் மொபைல் விளம்பரம் மூலம் பணம் மோசடி; தென்காசி சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மீட்பு..

எழுதியவர்: mohan April 14, 2022, 10:56 am

இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் மொபைல் தருவதாக மோசடி செய்யப்பட்ட பணம் தென்காசி சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மீட்கப்பட்டு உரிய அறிவுரை வழங்கி ஒப்படைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், கலப்பகுலம் பகுதியை சேர்ந்த அன்புச்செல்வன். இவர் இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் மொபைல் போன் விற்கப்படுவதாக வந்த விளம்பரத்தை நம்பி 12,800/- ரூபாய் பணத்தை விளம்பரத்தில் வந்த வங்கி கணக்கிற்கு Phone Pe மூலமாக அனுப்பி ஏமாந்து விட்டதாகவும், தனது பணத்தை மீட்டுத் தருமாறு தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின் படி காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி விசாரணை மேற்கொண்டு மேற்படி பணத்தை மீட்டுள்ளார்.இவ்வாறு மீட்கப்பட்ட 12,800/- ரூபாய் பணம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் முன்னிலையில் தகுந்த ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கி ஒப்படைக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!