17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி அருகே புகையிலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது;புகையிலை பொருட்கள் பறிமுதல்..

தென்காசி அருகே புகையிலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது;புகையிலை பொருட்கள் பறிமுதல்..

எழுதியவர்: mohan April 14, 2022, 10:47 am

தென்காசி அருகே புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரிடமிருந்து 130 கிலோ புகையிலை மற்றும் மற்றொருவரிடமிருந்து 320 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் உட்கோட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான காவல்துறையினர் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த வல்லம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(47) என்ற நபரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த முருகன்(44) என்ற நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,58,000 ரூபாய் மதிப்புள்ள 320 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!