18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள 80 சிலிண்டர்கள் வேதி திரவம் மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள 80 சிலிண்டர்கள் வேதி திரவம் மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எழுதியவர்: mohan April 13, 2022, 11:04 am

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக நிகழ்வு மாலை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாண நிகழ்வில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடு பணிகள் என்பது கோவில் உள் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயில் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு சிலிண்டர்கள் பராமரிப்பு பணி தனியார் ஊழியர்களைக் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிலிண்டர் மூன்று முதல் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அதன் உள்ளே உள்ள மோனோ அமைனிய் பாஸ்பேட் என்கின்ற அந்த வேதிப்பொருள் மாற்றப்படும் அதனை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்தப் பணிகள் நாளைக்கு முடிக்கப்படும் எனது பணியில் ஈடுபட்டுள்ள தனியார் ஊழியர்கள் நிறுவனர் தெரிவித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!