18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் தாம்பூலப் பை வழங்க ஏற்பாடு.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் தாம்பூலப் பை வழங்க ஏற்பாடு.

எழுதியவர்: mohan April 13, 2022, 10:47 am

சித்திரை திருவிழாவை முன்னிட்டு நல்லொன்றுக்கு 100 கிலோ வரையில் குங்குமம் உற்பத்திமதுரையில் உலக புகழ்பெற்ற சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.அதனை தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.சித்திரைப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள மேல – வடக்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபதில் நடைபெற உள்ளது.மேலும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றதும் , பெண்கள் தங்களது தாலிக் கயிற்றை மாற்றி , புதிய தாலிக் கயிற்றை அணிந்து கொள்வதற்காக அன்று பிரசாதமாக வழங்க மஞ்சள் கயிறுகள், உள்ளிட்ட பொருள்கள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றது.தொடர்ந்து திருக்கல்யாணத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் திருமணத்திற்கு வழங்கப்படும் தாம்பூல பை பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.அந்த வகையில் மஞ்சள் கயிறு, கிழங்கு மஞ்சள், தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட் அடங்கிய தாம்பூலப்பை பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தாம்பூலப்பை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல் கோவில் தெற்கு – மேல ஆடி வீதியில் குங்குமம் தயாரிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாளொன்றிற்கு சுமார் 100 கிலோ அளவிலான தாழம்பூ குங்குமம் உற்பத்தி செய்யப்பட்டு 8 கிராம், 40 கிராம், 100 கிராம் ஆகிய 3 ரகங்களில் பாக்கெட்டுகளாக பேக் செய்யப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!