18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போட்டித்தேர்வு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்..

போட்டித்தேர்வு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்..

எழுதியவர்: mohan April 13, 2022, 10:28 am

கல்வி தொலைக்காட்சியில் அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வு ஆர்வலர்கள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் காணொளி நிகழ்ச்சியினை பயன்படுத்தி பயன்பெறுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கோபால சுந்தர்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தமிழகத்தை சார்ந்த போட்டித் தேர்வு ஆர்வலர்களை தயார்படுத்தும்நோக்கில், தமிழக முதல்வரால் கல்வித் தொலைக்காட்சியில் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கான தனி ஒளிபரப்பு அலைவரிசை 20.03.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து ஒளிபரப்பட்டு வருகிறது. இவ்வொளி பரப்பில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள், ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியபல்வேறு நிகழ்ச்சிகளை தினமும் முற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரையும், இதன் மறு ஒளிபரப்பு பிற்பகல் 7.00 மணியிலிருந்து 9.00 மணிவரையும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. போட்டித் தேர்விற்கு தயாராகும் தேர்வு ஆர்வலர்கள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் காணொளி நிகழ்ச்சியினை பயன்படுத்தி பயன்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கோபால சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!