17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளிக்குழந்தைகளின் மனம் கவர்நத முதல்வர் ஸ்டாலின்.

பள்ளிக்குழந்தைகளின் மனம் கவர்நத முதல்வர் ஸ்டாலின்.

எழுதியவர்: mohan April 12, 2022, 1:05 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப் பேட்டையில் உள்ளது நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி.அரசு உதவி பெறும் பள்ளியான இப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் வருடந்தோறும் பள்ளி இறுதியாண்டில் ஓவியப் போட்டி கட்டுரைப் போட்டி நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டும் ஓவியப்போட்டி நடைபெற்றது.இதில் மனம் கவர்ந்த தலைவர் என்னும் தலைப்பில் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த தலைவரின் படத்தை ஓவியமாக வரையச் சொல்லியிருந்தனர்.ஓவியப் போட்டி என்றால் வழக்கமாக குழந்தைகள் காந்தி நேதாஜி நேரு காமராஜர் போன்ற தலைவர்களின் ஓவியத்தை வரைவர்.

ஆனால் இந்த வருடம் பெரும்பாலான மாணவ மாணவிகள்; தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்திருந்தனர்.இது பள்ளி ஆசிரியர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.பல நல்ல திட்டங்கள் மூலம் மக்களின் மனம் கவர்ந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது குழந்தைகளின் மனதையும் கவர்ந்துள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது..இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு கூறுகையில்  தமிழக தலைமைப்பொறுப்பை வகித்து சிறந்த நிர்வாகியாக உள்ள முதல்வர் ஸ்டாலின் தற்போது மெல்ல மெல்ல மாணவ மாணவியரின் மனதில் நிற்க தொடங்கி விட்டார்.அதற்கு எடுத்துக்காட்டாக இச்செயல் அமைந்திருப்பதாக தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!