18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீங்கள் பார்ப்பது ஆர்டிசியன் ஊற்று அல்ல பாதாள சாக்கடைஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் கோரிக்கை …

நீங்கள் பார்ப்பது ஆர்டிசியன் ஊற்று அல்ல பாதாள சாக்கடைஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் கோரிக்கை …

எழுதியவர்: mohan April 12, 2022, 12:28 pm

 மதுரை நகரில் பல இடங்களில், பாதாள சாக்கடை மேலே போடப்பட்ட மூடிகள் மேல், சாக்கடை கழிவுகள் பொங்குவது காணமுடிகிறது. மதுரையில், தொடர்ந்து வெப்பநிலை நிலவி வந்தாலும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.இதனால், கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் பொங்கி வழிகிறது .இது போன்ற நிலைகள் மதுரை நகரில் வடக்குமாசி வீதி, மேலமடை, ஜூப்பிலி டவுன் ,கோமதிபுரம், ஆகிய பகுதிகளில் காண முடிகிறது .இதை, மாநகராட்சி சுகாதாரத்துறை அவ்வப்போது வந்து சீர் செய்தாலும், பொதுமக்கள் திறந்த வெளியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் குப்பைகளை காட்டுவதும், ஆடு, மாடுகளை வளர்ப்போர் சிலர் சாணங்களைக் கொண்டு வந்து கழிவு நீர் கால்வாயில் காட்டுவதிலும், அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் சங்கம் ஆவதை காணமுடியும். இதுகுறித்து, மதுரை மாநகராட்சி நிர்வாகம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!