திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில்
பேரூராட்சி கவுன்சிலர்கள் நடைபெற்றது. துணைத் தலைவர் முருகேசன், செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு: நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் சொத்து வரியில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றியது கண்டித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அப்போது அதிமுக கவுன்சிலர்கள் கூறியதாவது: சொத்து வரியில் பல்வேறு வகைகள் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. அதனை முறையாக சீராய்வு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வெளிநடப்பு செய்வதாக அதிமுக பேரூராட்சி கவுன்சிலர்கள் கூறினார்கள். இதனால் நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
நிலக்கோட்டை பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
எழுதியவர்: mohan April 12, 2022, 11:40 am




You must be logged in to post a comment.