17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் இராணுவ கண்காட்சி நடத்திட வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை கோரிக்கை.

மதுரையில் இராணுவ கண்காட்சி நடத்திட வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை கோரிக்கை.

எழுதியவர்: mohan April 9, 2022, 11:27 am

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ்சேகர்.,இ.ஆ.ப., அவர்களை சந்தித்தார்.அப்போது மதுரையில் இந்திய இராணுவ முப்படைகளின் கண்காட்சியை நடத்திட மத்திய இராணுவ அமைச்சகத்திற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்குமாறு கோரிக்கை மனு வழங்கினார்.இதுகுறித்து வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்-தமிழ்நாட்டு மக்கள், முக்கியமாக இளைஞர்கள் மிகுந்த தேசப்பற்று மிக்கவர்கள்.மேலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் முக்கியத்துவம் வாய்ந்ததாக மதுரை மாவட்டம் உள்ளது.அந்த வகையில் தமிழ்நாட்டின் தென் பகுதி மக்களுக்கு இந்திய இராணுவ முப்படைகளின் தயார் நிலை, நவீனத்துவம் மற்றும் நாட்டுக்கான அவர்களின் தியாகங்களை எடுத்துக்காட்டும் வகையில் இக்கண்காட்சியை நடத்த வேண்டும்.மேலும் தமிழ்நாட்டின் தென் பகுதி இளைஞர்களுக்கு இராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக சேவையாற்றும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த கண்காட்சி அமைய வேண்டும்.அப்படிப்பட்ட சிறப்பு மிக்க இந்திய இராணுவ முப்படைகளின் கண்காட்சியை மதுரையில் விரைவில் நடத்திட இந்திய இராணுவ அமைச்சகத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்களை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கேட்டுக் கொண்டோம் என்றார்.இந்த சந்திப்பின் போது சமூக ஆர்வலர் உதவும் உள்ளம் பெரியதுரை உடன் இருந்தார்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக அவசியம் தகுந்த பரிந்துரை அனுப்பப்படும் என்று வழிகாட்டி மணிகண்டனிடம் உறுதியளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!