18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் பகுதியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மேயர் தொடங்கிவைத்தார்.

திருப்பரங்குன்றம் பகுதியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மேயர் தொடங்கிவைத்தார்.

எழுதியவர்: mohan April 7, 2022, 10:29 am

 தமிழ்நாடு இறையியல் கல்லூரி சார்பாக பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் மதுரையின் முதல் பெண் மேயரான இந்திராணி பொன் வசந்த் கலந்து கொண்டு பச்சைக் கொடி அசைத்து இந்த பேரணியை துவக்கி வைத்தார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள், உய்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த பேரணியில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதில் பங்கேற்ற மாணவர்கள் கையில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் போட்டு பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணி திருப்பரங்குன்றம், திருநகர் முக்கிய சாலைகளில் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!