17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சங்கரன்கோவில் நகர காவல்துறை சார்பில் பள்ளி குழந்தைகளிடம் விழிப்புணர்வு..

சங்கரன்கோவில் நகர காவல்துறை சார்பில் பள்ளி குழந்தைகளிடம் விழிப்புணர்வு..

எழுதியவர்: mohan April 6, 2022, 10:50 am

சங்கரன்கோவில் நகர காவல்துறை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாசன்,முன்பின் அறிமுகம் தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம் எனவும், பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் வழங்கி குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளியில் காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாசன் பள்ளி குழந்தைகளிடம் உங்களுக்கு பள்ளியிலோ வெளியிலோ ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், சாலையில் முன்பின் தெரியாத நபர்களிடம் பேச வேண்டாம் எனவும், அவர்கள் தரும் எந்த ஒரு பொருளையும் வாங்க கூடாது என்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் சிறு வயது முதலே உயர்ந்த குறிக்கோளுடன் நன்கு படித்து வாழ்க்கையில் உயர்ந்த பதவியை அடைந்து தங்களின் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!