18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அம்மைய நாயக்கனூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பணிகள் துவக்கம் .

அம்மைய நாயக்கனூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பணிகள் துவக்கம் .

எழுதியவர்: mohan April 5, 2022, 10:15 am

நிலக்கோட்டை. ஏப்.5. அம்மையநாயக்கனூர் அருகே மாலையகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டகுள்ளன் சேர்வைகாரன்பட்டியில் சாக்கடை கால்வாய் அமைக்க. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்து. மேலும் குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டி கட்ட ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை. குள்ளன்சேர்வைகாரன்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதற்கு நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிஎம்.எல்.ஏ. தேன்மொழி சேகர் தலைமை தாங்கினார் குடிநீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் யாகப்பன். மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார். நிலக்கோட்டை பேரூர் செயலாளர் V.S.S. சேகர் மாலைய கவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஜான்இன்னாச்சி. துணைத் தலைவர் மாலன்.அ.தி.மு.க. நிர்வாகிகள் மேட்டூர் செந்தில்குமார் பூக்கடை சரவணன் தங்கப்பாண்டியன் ஜோஸ்மின் சுசிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!