18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஒத்திவைப்பு.

நிலக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஒத்திவைப்பு.

எழுதியவர்: mohan April 5, 2022, 10:09 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்யாகப்பன், ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்பட 6 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கவுன்சிலர்கள் உள்பட 14 பேர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக அரைமணிநேரம் காத்துக்கொண்டிருந்த அதிகாரிகள் மற்றும் தலைவர் துணைத் தலைவர் உள்பட காத்திருந்து பின்னர் அரை மணி நேரம் முடிந்தும் 14 கவுன்சிலர்களும் வராத காரணத்தால் கூட்டம் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!