17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: mohan April 5, 2022, 9:53 am

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல்,கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராகவும், ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதாகவும், ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும், சிலிண்டர் விலையை உயர்த்தாதே என்ற கோஷங்களையும் பெண்கள் முழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!