17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாவூர்சத்திரம் அருகே கஞ்சா பதுக்கிய நபர் கைது; 2 கிலோ கஞ்சா பறிமுதல்..

பாவூர்சத்திரம் அருகே கஞ்சா பதுக்கிய நபர் கைது; 2 கிலோ கஞ்சா பறிமுதல்..

எழுதியவர்: mohan April 3, 2022, 11:58 am

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் சைலேந்திர பாபு IPS உத்தரவு மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தலின் பேரில் சட்டவிரோதமாக குட்கா, கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பௌத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திப்பணம்பட்டி பகுதியில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் சுரேஷ் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திர பாண்டி என்பவரின் மகன் ராமச்சந்திரன் (47) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!