வேலூரில் கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 101 டிகிரி வெய்யில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வெய்யிலில் வெளியே சென்று வர மிகுந்த சிரமம் அடைகின்றனர்.போக்குவரத்து காவலர்கள் வெய்யிலில் பணிசெய்வதில் சிரமம் ஏற்படுகிறது.அதற்காக காவல்துறை மூலம் சோலார்கேப் வழங்கப்படும்.அதன்படி இன்று 1 – ம் தேதி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, குடியாத்தம் பகுதி போக்குவரத்து காவலர்களுக்கு சோலார்கேப் வழங்கும் நிகழ்ச்சியில் வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா வழங்கினார்.உடன் எஸ்.பி.ராஜேஷ்கண்ணா,ஏ.எஸ்.பி.சுந்தரமூர்த்தி, வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன், உதவி காவல் ஆய்வாளர் கன்னியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வேலூரில் கோடை வெய்யில் துவக்கம் போக்குவரத்து காவலர்களுக்கு சோலார் கேப் வழங்கிய டிஐஜி .
எழுதியவர்: mohan April 2, 2022, 10:15 am




You must be logged in to post a comment.